அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே தேவனூரை சேர்ந்தவர் தவமணி. இவரது கணவர் பழனிச்சாமி மின்சார வாரியத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்த நிலையில், பணியின் போதே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தனது கணவரின் மரணத்திற்கு நிவாரணம் வழங்கக்கோரி அரியலூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க இன்று ஆட்சியர் அலுவலகம் வருகை தந்தார் தவமணி. அப்போது ஆட்சியர் அலுவலக வாயிலிலேயே திடீரென அவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கோரிக்கை மனுவுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த பெண் திடீரென மயங்கி விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த பெண்.. பரபரப்பு
- by Authour
