Skip to content

கிணற்றில் குதித்த‌ பெண்…மீட்க முயன்ற தீயணைப்பு வீர‌ர் உள்பட 3 பேர் பலி…

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் நெடுவத்தூரில் அர்ச்சனா (33) என்ற பெண் 80 அடி கிணற்றில் ஒரு குதித்தார். இதுகுறித்து கொட்டாரக்கரா தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் அந்த பெண்ணை காப்பாற்றும் முயற்சிகளை தொடங்கினர். சோனி குமார் என்ற தீயணைப்பு வீரர் பாதுகாப்பு உபகரணங்களுடன் கிணற்றில் இறங்கி அர்ச்சனாவை காப்பாற்ற முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றின் சுவர் இடிந்து கிணற்றுக்குள் இருந்த சோனி குமார் மற்றும் அர்ச்சனா மீது விழுந்தது. மேலும் கிணற்றின் அருகில் நின்று கொண்டிருந்த அர்ச்சனாவின் நண்பரான சிவகிருஷ்ணன் என்பவரும் கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.
உடனடியாக அவர்கள் 3 பேரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் 3 பேரும் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அர்ச்சனாவுக்கும், சிவகிருஷ்ணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக அர்ச்சனா கிணற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிய வந்துள்ளது.

error: Content is protected !!