Skip to content

கள்ளக்காதலனை கொன்ற பெண்… திருச்சி அருகே பயங்கரம்

  • by Authour

திருச்சி,  திருவெறும்பூர் அம்பேத்கர் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ்குமார்(50). தனியார் பஸ் டிரைவர். இவரது மனைவி மகேஸ்வரி. ரேசன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் மீனா பிரியா, மகன் சரவணகுமார். மீனா பிரியாவிற்கு திருமணமாகி விட்டது. தம்பதி இடையே கருத்து வேறுபாட்டால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கொத்தனார் வீரமுத்துவின்(52) மனைவி லட்சுமியுடன்(45) ரமேஷ் குமாருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர்.நேற்ஞ இரவு அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே ரமேஷ் குமார், லட்சுமியுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் அவர் லட்சுமியின் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.இதுபற்றி லட்சுமி தனது கணவர் வீரமுத்துவிடம் கூறியுள்ளார். இதையடுத்து வீரமுத்து அங்கு வந்து ரமேஷ் குமாரை தட்டிக்கேட்டார். இதனால் 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்பகுதியினர் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

அதன்பின்னர் வீட்டுக்கு வந்த ரமேஷ் குமார் தனது மைத்துனர் தியாகராஜனின் மகன் ரோகித் சர்மாவிடம் அவரது செல்போனை வாங்கிக் கொண்டு ரயில்வே தண்டவாளம் வழியாக சென்றுள்ளார். ரோகித் சர்மா செல்போனை வாங்க நள்ளிரவு ரயில்வே தண்டவாளம் பகுதிக்கு சென்றபோது வீரமுத்து வீட்டின் எதிரே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ரமேஷ் குமார் தலையில் 3 இடத்திலும், இடது விலா பகுதியில் 6 இடத்திலும், கையில் 5 இடத்திலும் கத்திக்குத்து காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து ரோகித் சர்மா திருவெறும்பூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த போலீசார் ரமேஷ் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி விசாரிக்க போலீசார் வீரமுத்து வீட்டுக்கு சென்ற போது, தலை உள்ளிட்ட 3 இடங்களில் லேசான கத்திக்குத்து காயத்துடன் வீரமுத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் திருச்சி அரசு  ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி போலீசார்   விசாரணையில், ஆத்திரத்தில் இருந்த ரமேஷ் குமார், வீரமுத்து வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது இருவரிடையே தகராறு ஏற்பட்டது. மாறி, மாறி கத்தியால் குத்திக்கொண்டனர். லட்சுமியும் சேர்ந்து ரமேஷ் குமாரை தாக்கியுள்ளார். இதில் இறந்த ரமேஷ் குமாரின் உடலை தண்டவாளத்தில் போட்டது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் வீரமுத்துவுக்கு மட்டும் தான் தொடர்பா, அல்லது வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்று வீரமுத்துவையும், லட்சுமியையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!