கேரளா மாநிலம் பாலக்காடு ஐஎம்ஏ ஜங்ஷனில் போக்குவரத்து இடையூறாக வயதான பெண் ஒருவர் நமாஸ் செய்தார். இதையடுத்து அவரை போலீசார் பிடித்து சென்று விசாரித்தனர். இந்த விசாரணையின்போது குடும்ப பிரச்சனையை தீர்க்க கோரி இந்த செயலில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
சாலையில் கார், டூவீலர், லாரி என்று ஏராளமான வாகனங்கள் சென்று வந்தனர். ஆனால் அதனை கண்டுக்கொள்ளாத அந்த பெண் சாலையில் ‛நமாஸ்’ செய்தார்.
நடுரோட்டில் அவர் ‛நமாஸ்’ செய்ததால் அந்த சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த பாலக்காடு தெற்கு போலீசார் உடனடியாக வந்து அந்த பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தி தங்களுடன் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் சொத்து பிரச்சனையை தீர்க்க கோரி விநோதமான முறையில் போராட்டம் நடத்தியது தெரியவந்தது.
அதாவது அந்த பெண்ணுக்கும், அவரது குடும்ப உறுப்பினர்களும் சொத்து தகராறு உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் அவர் பலமுறை புகார் அளித்துள்ளார். ஆனால் பிரச்சனை தீர்த்து வைக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அந்த பெண் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளார்.-

