மதுரை மாவட்டம் மேலூர் பூதமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜ் என்பவரின் மனைவி போதும் பொண்ணு (25) தனது 4 வயது மற்றும் 2 வயது மகன்களுடன் கடந்த நவம்பர் 26 அன்று வீட்டை விட்டு வெளியே சென்றார். அவர்களை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், டிசம்பர் 9 அன்று கணவர் ராஜ் கீழவளவு போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போனவர்களைத் தேடி வருகின்றனர்.

