Skip to content

முத்தரப்பு மகளிர் கிரிக்கெட்: இந்தியா சாம்பியன்

இந்​தி​யா, இலங்​கை, தென் ஆப்​பிரிக்க  மகளிர் கிரிக்கெட் அணி​கள் மோதிய  போட்டி இலங்​கை​யில் நடை​பெற்று வந்​தது. இதில் இந்​தி​யா, இலங்கை அணி​கள் இறு​திப் போட்​டிக்கு முன்​னேறின.  நேற்று  கொழும்பில் நடை​பெற்ற இறு​திப் போட்​டி​யில் முதலில் ஆடிய இந்​திய அணி 50 ஓவர்​களில் 7 விக்​கெட் இழப்​புக்கு 342 ரன்​கள் குவித்​தது.

 343 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் களமிறங்கிய இலங்கை  அணி 48.2 ஓவர்​களில் 245 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. இதையடுத்து 97 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற இந்​திய மகளிர் அணி, 3 நாடு​கள் கோப்​பையைக் கைப்​பற்​றியது.
இலங்கை அணி​யில் அதி​கபட்​ச​மாக கேப்​டன் சமாரி அத்​தப்​பட்டு 51 ரன்​கள் குவித்​தார். இந்​திய அணி தரப்​பில் ஸ்னே ராணா 4, அமன்​ஜோத் கவுர் 3, சரணி ஒரு விக்​கெட் வீழ்த்​தினர். ஆட்​ட​ நாயகி​யாக ஸ்மிருதி மந்​த​னா​வும், தொடர்​நாயகி​யாக ஸ்னே ராணா​வும்​ தேர்​வு செய்​யப்​பட்​டனர்​.
error: Content is protected !!