உலக தாய்ப்பால் வாரம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் உலகமெங்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தஞ்சாவூரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது, தஞ்சை ரயிலடி பகுதியில் தொடங்கிய இந்த பேரணியை மாநகராட்சி மேயர் இராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்த பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், செவிலியர்கள்
கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை முக்கிய வீதிகள் வழியாக எடுத்துச் சென்றனர், தாய்ப்பால் வழங்குவதால் குழந்தைகள் அதிக நோய் எதிர்ப்பு சக்தி பெறுவதோடு உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவை வரும் வாய்ப்புகளும் குறைகின்றது, தாய்ப்பால் ஊட்டுவதால் குழந்தையின் மூளை வளர்ச்சியும் உணர்ச்சித் திறனும் சிறப்பாக இருக்கும் என்று துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி பேசினார்.