Skip to content

இன்று உலக பாரம்பரியதினம்: கட்டணமின்றி சித்தன்னவாசலை ரசித்த சுற்றுலா பயணிகள்

  • by Authour

இன்று உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று உலக பாரம்பரிய சின்னங்களை பார்க்க தொல்லியல் துறை கட்டணம் வசூலிக்காது இலவசமாக கண்டுகளிக்கலாம் என தொல்லியல் துறை வழக்கம் போல அறிவித்தது.
இதைத்தொடர்ந்து மகாபலிபுரத்தில் உள்ள வெண்ணை உருண்டை, அர்ச்சுனன் தபசு ஆகிய இடங்களை சுற்றுலா பயணிகள் இலவசமாக கண்டுகளித்தனர்.
அதுபோல புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள மத்திய தொல்லியல் துறைக்கு சொந்தமான சுற்றுலா தலங்கள் கொடும்பாளூர் மூவர் கோயில், சித்தன்னவாசல் குடவரை கோயில் உள்ளிட்ட புராதன சுற்றுலா தலங்களில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் இன்று ஒரு நாள் இலவசமாக அனுமதிக்கப்படுகின்றனர்.

ள கொடும்பாளூர் மூவர் கோயில், சித்தன்னவாசல் ஆகியவை புகழ்பெற்ற சுற்றுலா தலங்களாகும்.அஜந்தா எல்லோரா குகை ஓவியங்களுக்கு சவால் விடும் அளவிற்கு பழங்கால கலர் ஓவியங்கள், சமணர் படுக்கைகள், கற்கால சிலைகள் என பல்வேறு வரலாற்று சிறப்புகளை கண் முன்னிறுத்தும் சித்தன்னவாசல், அதேபோல் சோழர் காலத்தில் கொடும்பாளூரை ஆண்ட வேளிர் குல அரசன் பூதி விக்கிரமகேசரி என்பவரால் கட்டப்பட்ட கொடும்பாளூர் மூவர் கோவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும்.

error: Content is protected !!