கரூர் மண்மங்கலம் தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று நடைபெற்றது இதில் முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி கலந்து கொண்டு முகாமை பார்வையிட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சிக்கு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் திரளாக வந்திருந்தனர்.
இன்று உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுவதால், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் புகைப்பட கலைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது தினமும் எங்களை நீங்கள் படம் பிடிக்கிறீர்கள். இன்று உங்களை வாழ்த்தும் வகையில் உங்களை நான் படம் பிடிக்கிறேன் என்று கூறி ஒரு போட்டோகிராபரிடம் இருந்து காமிராவை வாங்கி புகைப்பட கலைஞர்களை படம் பிடித்தார். இதில் பத்திரிகையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு செந்தில் பாலாஜிக்கு தங்கள் நன்றியினை தெரிவித்து விடைபெற்றனர்.