Skip to content

நேற்று வாக்குவாதம்-இன்று சமாதானம்… ஜிபி முத்து தெரு பிரச்னை

திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி பெருமாள்புரம் பகுதியை சேர்ந்தவர் நடிகரும் பிக்பாஸ் பிரபலமான ஜி.பி.முத்து . இவருக்கு சொந்தமான இடம் பெருமாள்புரம் பகுதியில் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெருமாள்புரத்தில் கீழத்தெருவை காணவில்லை என ஜி.பி.முத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் ஜி.பி.முத்து  ஊர் maக்களையும் ஊர் கோவிலையும் அவதூறாக பேசியதாக கூறி ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து நேற்று ஜி.பி.முத்துவின் வீட்டை முற்றுகையிடுட முயன்றனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் குலசேகரன்பட்டினம் போலீசார் தலையீட்டு இந்த பிரச்சனையை வருவாய்த்துறை அதிகாரிகளை வைத்து பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருந்தனர்.

இந்த நிலையில் இந்த பிரச்சனை சம்பந்தமான சமாதான கூட்டம் இன்று திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் பாலசுந்தரம் தலைமையில் நடந்தது. இதில் ஜி.பி.முத்து  உள்பட இரு தரப்பினரும் பங்கேற்றனர். இதில் தனது வீட்டிற்கு செல்லும் பாதையை பெற்றுத்தர வேண்டும் என்று ஜி.பி.முத்து  கோரிக்கை வைத்தார். இதை விசாரித்த அதிகாரிகள் ஜி.பி.முத்துவின் வீட்டிற்கு செல்லும் பாதையை சரி செய்து கொடுக்க வேண்டும் என்றும் அந்த பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நத்தம் இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதோ, கட்டுமானங்கள் ஏற்படுத்துவதோ கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் கோவிலை கட்டி கொள்ளலாம் என்று அறிவுறுத்தினர். மேலும் இரு தரப்பினர் இடையேவும் இனி வரும் காலங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரக்கூடாது. மீறி வந்தால் அரசு விதிகளின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதை ஒப்புக் கொண்ட இரு தரப்பினரும் எழுதி கொடுத்து கையொப்பம் இட்டனர். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை இன்று முடிவடைந்துள்ளது.

error: Content is protected !!