Skip to content

நீங்க என்னோட இன்னொரு தாய்…” – ராதிகா குறித்து- வரலட்சுமி சரத்குமார் கண்ணீர்

சிம்பு நடித்த ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான வரலட்சுமி சரத்குமார், தற்போது இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார். அவர் இயக்கும் புதிய படம் ‘சரஸ்வதி’. தமிழ், தெலுங்கில் இந்தப் படம் வெளியாகிறது. இந்தப் படத்தில் பிரியாமணி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சிம்பு நடித்த ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான வரலட்சுமி சரத்குமார், தற்போது இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார். அவர் இயக்கும் புதிய படம் ‘சரஸ்வதி’. தமிழ், தெலுங்கில் இந்தப் படம் வெளியாகிறது. இந்தப் படத்தில் பிரியாமணி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. அப்போது மேடையில் பேசிய நடிகை வரலட்சுமி சரத்குமார் மேடையில் எமோஷனலாகி கண்ணீர் விட்டார்.

அப்போது ராதிகாவை தன்னுடைய இன்னொரு தாய் என அழுதபடியே பேசிய வீடியோ சமூக

வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக நடிகை வரலட்சுமி சரத்குமார் பேசுகையில், “வாழ்க்கையில் சில நேரங்களில் நீங்கள் குடும்பத்துக்காக நிற்கவில்லை என்றாலும், குடும்பம் உங்களுக்காக எப்போதும் நிற்கும்.

அந்த வகையில் எனக்காக நின்றவர் ராதிகா. நீங்கள் எனக்கு 3-வது பெற்றோர். உங்களையும், என் அம்மாவையும் ஒரே நிகழ்ச்சியில் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

எனக்கு இப்போது 40 வயதாகிறது. நீங்களும், அப்பாவும் திருமணம் செய்துகொண்டு 25 ஆண்டுகள் கொண்டாடினீர்கள். அப்படி பார்த்தால் என்னுடைய பாதி வாழ்க்கையில் நீங்கள் தான் பெற்றோர்களாக இருந்திருக்கிறீர்கள். ராதிகா அம்மா எனக்கு மிகவும் ஆதரவாக இருந்திருக்கிறார்.

எல்லாவற்றிற்கும் நன்றி. நான் அழுகக் கூடாது என்று நினைத்தேன், ஆனால் அழுதுவிட்டேன்” என்றார். வரலட்சுமி சரத்குமார் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதே நிகழ்ச்சியில் வரலட்சுமி சரத்குமாரின் தாய் சாயா பேசுகையில், “ராதிகாவும், சரத்குமாரும், வரலட்சுமிக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறீர்கள்” என்றார். “தெலுங்கு சினிமாவில் உனக்கான

வாய்ப்புகள் இருக்கும் அங்கு சென்று நடி என நான் தான் வரலட்சுமியிடம் சொன்னேன்” என்று நடிகை ராதிகா பேசினார்.

முன்னதாக ஒருமுறை வரலட்சுமி சரத்குமார், நான் ராதிகாவை ஆண்ட்டி என்றுதான் அழைப்பேன். அவர் எனது அப்பாவின் இரண்டாவது மனைவி. அதற்காக நான் அவர்களை அம்மா என்று அழைக்க வேண்டும் என்று இல்லை. ராதிகாவின் குழந்தைகளும் நாங்களும் ஒன்றாகத்தான் வளர்ந்தோம். எங்களிடையே அன்பும், அக்கறையும் உள்ளது” என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!