கமல் தலைமையில் நடந்த மக்கள் நீதி மய்யம் நிர்வாகக்குழு செயற்குழுக் கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம். பொதுச்செயலர் அருணாச்சலம் உள்ளிட்ட ஐவர் கொண்ட தேர்தல் பணிக்குழுவையும் அமைத்தது மநீம. ரூ. 50,000 செலுத்தி விருப்ப மனு பெற்றுக்கொள்ளலாம் என மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு வௌியிட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி 5 பேர் கொண்ட பணிக்குழுவை நியமித்தது மநீம கூட்டத்தில் தீர்மானம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் மாற்றங்களை கண்டித்து மநீம கூட்டத்தில் தீர்மானம். மீண்டும் மீண்டும் பல்வேறு வடிவங்களில் இந்தியை திணிப்பதாக மநீம செயற்குழு நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

