தமிழகம் முழுவதும் வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால், ஹோட்டல்கள் முதல் சிறு டீ கடைகள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சிலிண்டர் பிரச்னை சரியாகும் வரை பல்வேறு ஊர்களில் ஹோட்டல்கள், டீ கடைகள் இயங்கும் நேரம் பாதியாக குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், ஹோட்டல்களில் தோசை, ஆம்லெட் கிடைக்காது என்றும் டீ கடைகளில் வடை, பஜ்ஜி போன்றவை கிடைக்காது என்றும் போர்டுகளில் எழுதி வைக்கப்பட்டுள்ளன. இதனால் வாகனஓட்டிகள் மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.

