உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டம் சில்கனா கிராமத்தை சேர்ந்த இளம்பெண் அங்கிதா (18). இவரும் அதே பகுதியை சேர்ந்த மகிழ் (22) என்ற இளைஞரும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு அங்கிதாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனிடையே, மகிழை கொலை செய்ய அங்கிதாவின் குடும்பத்தினர் திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி, அங்கிதாவின் இளைய சகோதரர்கள் உள்பட குடும்பத்தினர் சேர்ந்து மகிழை நேற்று முன் தினம் கொடூரமாக கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அங்கிதாவின் இளைய சகோதரர்கள் 2 பேர் உள்பட மேலும் சிலரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், காதலனை குடும்பத்தினரே கொலை செய்ததால் விரக்தியடைந்த அங்கிதா நேற்று வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், விரைந்து சென்று அங்கிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.