தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் சின்ன சங்கரம்பேட்டை மண்டலம் காஜாபூரைச் சேர்ந்தவர்கள் பிரவீன் கவுடு-அகிலா தம்பதி. கூலித்தொழிலாளியான இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை இருந்தது. பிரவீன் கவுடு உடல் நலக்குறைவால், கடந்த ஓராண்டுக்கு முன்பு இறந்தார். இதனால் அகிலா மாமியார் வீட்டிலேயே குழந்தையுடன் இருந்து வந்தார். கணவர் இறந்த சோகத்தில் இருந்த அகிலாவை மறுமணம் செய்து கொள்ளுமாறு அவரது மாமியார் கூறினார்.
ஆனால் அவர் மறுமணத்துக்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. இந்தநிலையில் அகிலா நேற்றுமுன்தினம் தனது குழந்தையை தூக்கில் தொங்கவிட்டு, தானும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

