Skip to content

ஜோதிடரின் கணிப்பை கேட்டு தன் உயிரை விட்ட இளம்பெண்

பெங்களூருவில் ஜோதிடரின் கணிப்பைக் கேட்டு தன் உயிரை மாய்த்துக்கொண்ட இளம்பெண். 27 வயதான வித்யஜோதி மாற்று சமூக இளைஞர் ஒருவரை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய இருந்த நிலையில், ஜோதிடர் ஒருவர் மாற்று சமூகத்தினரை திருமணம் செய்வதால் பிரச்னைகள் உண்டாகி விவகரத்துக்கு உள்ளாகும் என கூறியுள்ளார்.

அதை தடுக்க ஒன்பது நாட்கள் வீட்டில் பூஜை செய்ய வேண்டும். ஒன்பதாவது நாள் கடவுளுக்கு தாலி சமர்ப்பிக்க வேண்டும் என்று, பரிகாரமும் தெரிவித்துள்ளார். இதன்படி எட்டு நாட்கள் பூஜைகளை முடித்தனர். நேற்று முன்தினம் கடைசி நாள் பூஜையை முடித்து கொண்டு, தாலி சமர்ப்பிக்க கோவிலுக்கு செல்ல தயாராகி வந்தனர். மதியம் உணவு முடிந்து, தன் அறைக்கு சென்ற வித்யா ஜோதி, வெளியே வரவேயில்லை. அவர் ஓர்க் பிரம் ஹோமில் இருந்ததால், பணியில் இருப்பார் என குடும்பத்தினர் நினைத்தனர்.

இரவு 8:30 மணியளவில், கோவிலுக்கு செல்ல வேண்டி இருந்ததால், தாய் கவிதா மகளை அழைக்க சென்றார். பல முறை கதவை தட்டியும் திறக்கவில்லை. சந்தேகமடைந்த தாய், ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த போது, மகள் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் வித்யா ஜோதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனக்கு அல்பாயுசு என, ஜோதிடர் கூறியதால் மன அழுத்தத்தில் இருந்த வித்யா ஜோதி, தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது முடிவுக்கு உண்மையான காரணம் என்ன என்பது குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!