Skip to content

இளம்பெண் தற்கொலை.. செல்போன் திருட்டு….. திருச்சி க்ரைம்

இளம்பெண் தற்கொலை..

திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவரது மனைவி கீர்த்தனா ( 24)இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. விக்னேஸ்வரன் குடித்துவிட்டு அடிக்கடி கீர்த்தனாவுடன் சண்டை போடுவாராம். இந்நிலையில் நேற்று கணவன், மனைவியுடைய தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த கீர்த்தனா கூரைக் கற்றையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து திருவரங்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கீர்த்தனா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து  வருகின்றனர்.

தொழிலாளி  தற்கொலை

திருச்சி வடக்கு தாராநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த கிருஷ்ணன் (வயது 50) கூலி தொழிலாளி இவருக்கு திருமணமாக
வில்லை. இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த மின்விசிறியில் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து காந்தி மார்க்கெட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆனந்த கிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காபி கடைக்குள் புகுந்து செல்போனை திருட்டு …

திருச்சி ஈ வி ஆர் ரோடு பகுதியில் காபி கடை வைத்து நடத்தி வருபவர் ஸ்ரீராம்.இவரது கடைக்கு கடந்த 2ந் தேதி 2 சிறுவர்கள் உட்பட மூன்று பேர் கடைக்கு காபி குடிக்க வந்தனர். சிறிது நேரத்தில் கடையில் இருந்த ராம் செல்போனை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஸ்ரீராம் உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தார் இதையடுத்து பொதுமக்கள் 2 சிறுவர்கள் உள்பட மூன்று பேரை பிடித்து அரசு மருத்துவமனை போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது தென்னூர் இனாம்தார்தோப்பை சேர்ந்த முகமது இப்ராஹிம் ( 42) மற்றும் 2 சிறுவர்கள் செல்போனை திருடியதை ஒப்புக்கொண்டனர்.இதையடுத்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து முகமது இப்ராஹிம் மற்றும் இரண்டு சிறுவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இரண்டு சிறுவர்களை திருச்சி கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர். முகமது இப்ராஹீமை திருச்சி நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!