ஆந்திர மாநிலத்திலிருந்து திருவண்ணாமலை சந்தைக்கு வாழைத்தார் ஏற்றி வந்த சரக்குந்து ஓட்டுனர் ஒருவர், திருவண்ணாமலை கோயிலில் வழிபாடு செய்ய விரும்பிய தமது சகோதரி மற்றும் சகோதரி மகளையும் உடன் அழைத்து வந்துள்ளார். திருவண்ணாமலைக்கு முன்பாக ஏந்தல் என்ற இடத்தில் சரக்குந்தை மறித்து சோதனை நடத்திய இரு காவலர்கள், அதில் இருந்த இரு பெண்களையும் வலுக்கட்டாயமாக இறக்கியுள்ளனர். சந்தைக்கு சென்று திரும்பும் போது அவர்களை அழைத்துச் செல்லும்படி சரக்குந்து ஓட்டுனரிடம் கூறியுள்ளனர். பின்னர் அவர்கள் இருவரையும் வலுக்கட்டாயமாக ஆளில்லாத பகுதிக்கு அழைத்துச் சென்ற காவலர்கள், தாயின் கண் எதிரிலேயே 19 வயது மகளை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். பாதிக்கப்பட்ட பெண் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் ஈடுபட்டது திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய காவலர்கள் சுந்தர் மற்றும் சுரேஷ் ராஜ் ஆவார். இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நேரடியாக விசாரணை மேற்கொண்டு, அவர்கள் இருவரும் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருவண்ணாமலையில் இளம்பெண் பலாத்காரம்… 2 காவலர்கள் சஸ்பெண்ட்…
- by Authour
