Skip to content

“உங்க அன்புதான் என்னை இளமையாக வைத்திருக்கு” – திருச்சி திமுக மாநாட்டில் முதல்வர் நெகிழ்ச்சி

திருச்சி சிறுகனூரில் திமுகவின் 12-வது மாநில மாநாடு இசை நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் 10 லட்சம் பேர் வரை பங்கேற்றுள்ளனர். திருச்சி மாநாட்டில் 110 அடி உயர கம்பத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக கொடியை ஏற்றினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாறினார்.

முதல்வர் உரையில்:

திருச்சியில் பெரும்சேனை திரண்டிருக்கிறது; என்னுடைய அழைப்பை ஏற்று வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. திருச்சியில் நடைபெறுவது திமுகவின் பெரிதினும் பெரிதான மாநில மாநாடு. கடந்த 3 மாதங்களாக நாம் நடத்துவது அனைத்தும் மாநாடுகள்தான். மண்டல வாரியாக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டை துணை முதல்வர் உதயநிதி நடத்தினார். திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, மகளிரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டை நடத்தினார். தொண்டர்களின் அன்புதான் என்னை இளமையாக வைத்துள்ளது.

error: Content is protected !!