தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே மாத்துாரை சேர்ந்தவர் கனகராஜ் (75). தொழிலதிபர், பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார். அ.தி.மு.க., கிளைக் கழக அவை தலைவராக இருந்தார். இவரை நேற்றுமுன்தினம் இரவு, வீட்டின் முகப்பில் உள்ள தனது நகை அடகு கடையில் இருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர், கனகராஜை கத்தியால் கத்தி விட்டு, தப்பி சென்றனர். இதில், கனகராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து நாச்சியார் கோவில் போலீசார் கனகராஜ் உடலை கைப்பற்றி, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அஸ்வின் ராஜ் (23) என்பவர் நேற்று காலை, தஞ்சாவூர் கிழக்கு போலீசில் சரண் அடைந்தார். அப்போது, போலீசார் அஸ்வின் ராஜீடம் விசாரணை நடத்தியதில், பணம் கொடுக்கல், வாங்கல் விவகாரத்தில், இருவருக்கும் முன்விரோதம், இருந்துள்ளது. இதனால், கனகராஜை கொலை செய்ததாக கூறினர். தொடர்ந்து நாச்சியார்கோவில் போலீசார் அஸ்வின் ராஜ் மீது கொலை வழக்குப்பதிந்து கைது செய்தனர்.