தனியார் நிறுவன ஊழியரை மிரட்டிய வாலிபர் கைது
திருச்சி பாலக்கரை துரைசாமிபுரத்தைச் சேர்ந்தவர் கோபிநாத் ( 47 ). இவர் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருகிறார் பாலக்கரை எடத்தெரு அருகே கோபிநாத் சென்ற போது மதுபோதையில் அங்கு வந்த வாலிபர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி,கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். இதுகுறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிந்து அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் (19) என்ற வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மளிகைக்கடைக்குள் புகுந்து வியாபாரி மனைவியை தாக்கியவர் கைது
திருச்சி பெரிய மிளகுபாறை பகுதியைச் சேர்ந்தவர் சாத்தப்பன். அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரது மனைவி கடையில் இருந்த போது அங்கு வந்த ஒருவர் அவரிடம் சிகரெட் வாங்கியுள்ளார். மேலும் பணம் தராமல் சென்றுள்ளார். இதுகுறித்து சாத்தப்பன் மனைவி கேட்கவே அவரை அந்த நபர் தராசை கொண்டு தாக்கி காயப்படுத்தியுள்ளார் காயமடைந்த சாத்தப்பன் மனைவி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் இதுகுறித்து செசன்ஸ் கோர்ட் போலீசார வழக்கு பதிந்து அகீர் பாஷா (50) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வாட்ஸ்சப்பில் பெண்குறித்து அவதூறு பரப்பிய மற்றொரு பெண் மீது வழக்கு
திருச்சி இ.பி.சாலை அண்ணா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் விஷ்வா ஜனனி ( 44. ) இவர்கள் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் மாத பராமரிப்பு தொகை ரூபாய் 1250 அனைத்து குடியிருப்பு வாசிகளிடமும் பெறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த குடியிருப்பைச் சேர்ந்த ஸ்ரீதேவி (42 )என்ற நபர் பராமரிப்பு தொகை தராமல் இருந்து வந்தார் . மேலும் மற்றவர்களையும் கொடுக்க வேண்டாம் என வற்புறுத்தியதாக தெரிகிறது. மாத பராமரிப்பு தொகை கொடுத்தவர்கள் குறித்து ஸ்ரீதேவி வாட்சப் செயலியில் தவறான பதிவுகளை பதிவிட்டுள்ளார் மேலும் இது குறித்து கேட்ட விஷ்வாஜனனியை அவர் தகாத வார்த்தைகளால் திட்டி அவதூறு தகவல்களை வாட்ஸ் அப் செயலில் பதிவிட்டுள்ளார். இது குறித்து கோட்டை போலீசார் ஸ்ரீதேவி மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.