போதை மாத்திரைகளுடன் வாலிபர் அதிரடியாக கைது ..
திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையிலான போலீசார் காந்தி மார்க்கெட் அருகே எடத்தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். மேலும் அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரிடம் சோதனை செய்தனர். அவரிடம் போதை மாத்திரை இருந்தது தெரிய வந்தது. பின்னர் விசாரணையில் திருச்சி கிழக்கு தாராநல்லூர் தோப்பு தெருவை சேர்ந்த அரவிந்த் என்பது தெரிய வந்தது. மேலும் அவரிடம் இருந்த 50 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.இதை எடுத்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து அரவிந்தை கைது செய்தனர்.
போலி பாஸ்போர்ட்டில் சிங்கப்பூர் செல்ல முயற்சி… பயணி சிக்கினார்
திருச்சி சர்வதேச விமான நிலையம் சுங்கத்துறை அதிகாரியாக பணியாற்றி வருபவர் சுகிபன். இவர் நேற்று பணியில் இருந்த போது புதுக்கோட்டை அறந்தாங்கி அரசர்குளம் பகுதியைச் சேர்ந்த மதியழகன் ( 51 ) என்பவர் சிங்கப்பூர் செல்வதற்காக திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவரது பாஸ்போர்ட்டை சரிபார்த்த போது அதில் பெயர் மற்றும் முகவரி போலியாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இதையடுத்து மதியழகன் ஏர்போர்ட் போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாரி புக்கிங் அலுவலம் உடைத்து பணம் கொள்ளை
திருச்சி அரியமங்கலம் கூவளக்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேவியர்(46). இவர் சென்னை பைபாஸ் சாலை சஞ்சீவி நகர் பகுதியில் லாரி புக்கிங் அலுவலகம் நடத்தி வருகிறார் இவர் கடந்த 21 ஆம் தேதி தனது அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றார் பின்னர் நேற்று காலை அலுவலகத்தை பிறக்க வந்துள்ளார் அப்போது கடையின் முன்பக்க ஷட்டரில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது இதை எடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.50,000 திருட்டு போனது தெரிய வந்தது. இதை எடுத்து சேவியர் கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியில் பாதசாரி உட்பட 2 பேர் சாவு
திருச்சி ரயில்வே ஜங்ஷன் பகுதியை சேர்ந்தவர் முருகன் (55). இவர் சம்பவத்தன்று பாரதியார் சாலை பகுதியில் ரோட்டை கடக்க முயன்றால் அப்போது அங்கு வந்த மோட்டார் சைக்கிளில் அடிபட்டு சாலை ஓரத்தில் விழுந்தார். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக செய்தனர் அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று முருகேசன் இருந்தார் இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் திம்மராயசமுத்திரம் புது காலனி பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் (45). இவர் சம்பவத்தன்று ஸ்ரீரங்கம் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஒய் ரோடு சந்திப்பு பகுதியில் தனது புல்லட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரது இடது பக்கத்தில் இருந்து வந்த அரசு பஸ் ஒன்று இவர் மீது மோதியது இதில் அவர் சாலையில் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இந்த விபத்தில் மகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மகேஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
