Skip to content

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை… திருச்சியில் சம்பவம்

திருச்சி வடக்கு காட்டூர் சோழன் நகர் 2வது குறுக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் குமார் (வயது 32) இவருக்கு திருமணம் ஆகி ஜனனி (30) என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர் கிஷோர் குமார் காட்டூர் பகுதியில் உள்ள பிரபல எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில்  விற்பனையாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் ஏற்பட்டது இதில் பல லட்சத்தை அவர் இழந்ததாக தெரிகிறது. இதனால் நெருக்கடிக்கு ஆளான கிஷோர் குமார் யாரும் எதிர்பாராத வகையில் வீட்டில் தூக்கு பட்டு தற்கொலைக்கு முயன்றார்
.பின்னர் உயிருக்கு போராடிய அவரை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு கிஷோர் குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர் பின்னர் ஜனனி கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!