Skip to content

திருச்சி அருகே ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள இடையபட்டியைச் சேர்ந்தவர் கஸ்தூரி ராஜா (23). இவர் ஆன்லைன் கேம் விளையாடி அதில் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வையம்பட்டி ரயில்வே ஸ்டேசன் அருகே தண்டல்காரனூர் என்ற இடத்தில் செனானை நோக்கிச் சென்ற பாண்டியன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். திருச்சி ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு  ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனனர்.

கஸ்தூரிராஜா தற்கொலை செய்து கொல்வதற்கு முன் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாட்ஸ் அப் குரூப்பில் ஆன்லைன் டிரேடிங் கேமில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொள்கிறேன் எனவும் மேலும் தனக்கு கேம் விளையாட பழக்கப்படுத்திய இருவரது பெயரை குறிப்பிட்டு தகவல் பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!