திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த குறும்பகேரிபுதூர் பகுதியை சேர்ந்த ஜீரோம் ஆனந்த் (32) மற்றும் அவரது நண்பர் அந்தோணி குமார் (31) ஆகிய இருவரும் அதே பகுதியில் சுடுகாட்டு எரிமேடை அருகில் குடித்து கொண்டு இருந்து உள்ளனர். அப்போது அந்த இடத்திற்கு சென்ற 5 வாலிபர்கள் எரிமேடையின் உள்ளே சென்று கை பையில் வைத்து இருந்த கஞ்சாவை கையில் எடுத்த பிடித்து உள்ளனர். அப்போது அங்கு இருந்த ஜிரோம் ஆனந்த் நீங்க எல்லாம் யாரு பா உங்களை எல்லாம் பார்த்தது கிடையாதே என்று கேட்டு உள்ளார். அதற்கு பதில் அளித்த அவர்கள் நாங்களும் இதே ஊர் என்று நக்கலாக பதில் அளித்து உள்ளனர். அதிர்ச்சி அடைந்த ஜிரோம்
ஆனந்த் இங்க யார் வீடு என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கஞ்சா குடுக்கிகள் நாங்க யாருன்னு போய் திருப்பத்தூர் ல கேட்டு பாரு என்று கூறி அடித்து உள்ளனர். கஞ்சா குடுக்கிகள் பையில் வைத்து இருந்த பட்டா கத்தியை எடுத்து ஜிரோம் ஆனந்த் என்பவரை சரமாரியாக தாக்கி உள்ளனர். செய்வது அறியாமல் தவித்த ஜிறோம் ஆனந்த் சத்தம் போட்டதால் கஞ்சா வைத்து இருந்த பையை விட்டு ஓட்டம் பிடித்து உள்ளனர். இது குறித்து ஊர் மக்களுக்கு தகவல் தெரிந்து ஜீரோம் ஆனந்த் மற்றும் அவரது நண்பர் அந்தோணி குமாரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எங்களை எல்லாம் ஒன்னும் செய்ய முடியாது என்று கஞ்சா போதையில் அட்டகாசம் செய்த வாலிபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.