கோவை, பொள்ளாச்சி அடுத்த கோமங்கலம் பகுதியில் பிரேமானந்தம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள குடோனை கோழிக்கோடு பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் குத்தகைக்கு எடுத்து தேங்காய் கொப்பரையை இருப்பு வைத்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி இவரது குடோனில் இருப்பு வைத்திருந்த சுமார் ஒரு டன் கொப்பரை திருடு போனதாக கோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கை நான்கு பேர் கொண்ட தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்த போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் கொழுமம் கிராமத்தை சேர்ந்த சூர்யா மற்றும் சிவா ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தியதில் கொப்பரை திருடி விற்றதை ஒப்புகொண்டதை அடுத்து இருவர் மீதும் கோமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி அருகே குடோனில் ஒரு டன் கொப்பரை அபேஸ்.. 2 பேர் கைது
- by Authour
