Skip to content

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு வாலிபர் பஸ்களை நிறுத்தி ரகளை..

கோவை கலெக்டர் அலுவலக சாலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளது. ரயில் நிலையம் மற்றும் பத்திர பதிவு அலுவலகம், வங்கி மற்றும் ஏராளமான முக்கிய அலுவலகங்கள் உள்ள சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

இந்த நிலையில் இன்று காலை அந்த சாலையில் வாலிபர் ஒருவர் திடீரென ரகளையில் ஈடுபட்டார். 

ஏற்கனவே அந்த பகுதியில் உள்ள வங்கி வளாகம் பகுதியில் அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால், வாகனங்கள் ரோட்டில் நிறுத்தப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில் இந்த வாலிபர் திடீரென அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி ரகளையில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அந்த வாலிபர் அந்த வழியாக வந்த தாழ்ந்தழை சொகுசு பேருந்து முன்பு நின்று கூச்சல் போடவே அங்கு வந்த போலீசார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது அவர் போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன் பிறகு அந்த வாலிபரை போலீசார் சமாதானம் செய்து அங்கு இருந்து அழைத்துச் சென்று விசாரித்து வருகிறார்கள். 

அந்த வாலிபர் யார் ? எதற்காக ரகளையில் ஈடுபட்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் இன்று காலை அங்கு பரபரப்பு நிலவியது

error: Content is protected !!