மணிப்பூர் மாநிலம் சந்தெல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் இந்தியா-மியான்மர் எல்லையில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
“இந்தோ-மியான்மர் எல்லைக்கு அருகில் உள்ள சந்தெல் மாவட்டத்தின் கெங்ஜாய் தாலுகாவின் நியூ சாம்தால் கிராமத்திற்கு அருகே ஆயுதமேந்திய போராளிகளின் நடமாட்டம் குறித்து தகவல் கிடைத்ததால் ஸ்பியர் கார்ப்ஸின் கீழ் உள்ள அசாம் ரைபிள்ஸ் பிரிவு நடவடிக்கையைத் தொடங்கியது.
அப்போது அசாம் ரைபிள்ஸ் பிரிவுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் குறைந்தது 10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிகிறது. இந்த நடவடிக்கை இன்னும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
“இந்த நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்குரிய போராளிகள், பாதுகாப்பு படையினரை சுட்டனர். அதற்கு பதிலடி கொடுத்தபோது 10 பேர் கொல்லப்பட்டனர்.