Skip to content

11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான பிரசாந்த், ராஜகோபால் சுன்கரா, இரா.கஜலட்சுமி, முரளீதரன் உள்ளிட்ட 11 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  சுன்சோங்கம் ஐஏஎஸ் போக்குவரத்துத்துறை அரசு முதன்மைச் செயலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பிரசாந்த் வடநெரே நிதித்துறை (செலவினம்) அரசு செயலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நிதித்துறை இணைச் செயலராக ராஜகோபால் சுன்கரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். நில அளவைத்துறை இயக்குநராக தீபக் ஜேக்கப் நியமிக்கப்பட்டுள்ளார்.போக்குவரத்து, சாலைப் பாதுகாப்பு கமிஷனராக கஜலட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குநராக கவிதா ராமுவும், குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநராக சமீரன் என்பவரும், மீன்வளத்துறை இயக்குநராக முரளீதரனும் நியமிக்கப்பட்டுள்ளனர். வருவாய் நிர்வாக ஆணையராக கிரண் குராலா நியமனம். கோவை வணிக வரி இணை கமிஷனராக தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை வணிக வரி( அதிக வரி செலுத்துவோர் பிரிவு) இணை கமிஷனராக நாராயண சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!