தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 28 முதல் , ஏப்ரல் 15 வரை நடந்தது. சுமார் 9.13 லட்சம் பேர் இந்த தேர்வினை எழுதினர். தேர்வு முடிவுகள் 19ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும், 3 நாள் முன்னதாக இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் 93.80% பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். வழக்கம் போல மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒவ்வொரு பாடத்திலும் சதமடித்தவர்கள் விவரம் வருமாறு:
தமிழ் 8, ஆங்கிலம் 346, கணிதம்1996 , அறிவியல்10838, சமூக அறிவியல்10256,
4917 பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி கிடைத்துள்ளது.சிவகங்கை மாவட்டம் தேர்ச்சியில் முதலிடம் பிடித்துள்ளது. அடுத்ததாக விருதுநகர் 2ம் இடமும், தூத்துக்குடி 3ம் இடமும், குமரி 4ம் இடமும், திருச்சி மாவட்டம் 5வது இடமும் பெற்றுள்ளது.
இதுபோல 11ம் வகுப்பு ரிசல்டும் இன்று வெளியிடப்பட்டது. இதில் 92.09% பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். 8.23 லட்சம் பேர் இந்த தேர்வினை எழுதினர். 11ம் வகுப்பு தேர்ச்சியில் அரியலூர் மாவட்டம் முதலிடம் பெற்றது. ஈரோடு 2ம் இடமும், விருதுநகர் 3ம் இடமும், கோவை 4ம் இடமும், தூத்துக்குடி மாவட்டம் 5ம் இடமும் பிடித்தது.
இந்த ரிசல்ட் விவரங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் இன்று சென்னையில் வெளியிட்டார்.