திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், ஆணையர் லி. மதுபாலன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடந்தது துணை ஆணையர்கள் வினோத், க.பாலு, நகரப் பொறியாளர் பி. சிவபாதம் ,மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார் , மதிவாணன், துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், .பி. ஜெயா நிர்மலா,மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் ,நகர் நல அலுவலர்,செயற்பொறியாளர்கள், மாநகராட்சி உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
பின்னர் மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்தில் மாமன்றத்தின் நியமன உறுப்பினராக மாற்றுத்திறனாளி ப.புவனேஸ்வரன் பதவி ஏற்றுக்கொண்டார். மேயர் அவருக்கு பொன்னாடை

அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன, துணை மேயர் ஜி. திவ்யா உள்ளிட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் நடந்த விவாதம் வருமாறு;-
காங்கிரஸ் கவுன்சிலர் ரெக்ஸ் இன்றைய மாமன்ற கூட்டத்தில், காப்பகத்தில் அடைக்கப்படும் நாய்களுக்கான வரையறை கேட்டறிந்து, பன்றிகளை அகற்ற உடனடி நடவடிக்கை வேண்டும்.
மழைநீர் தேங்கிய நிலத்தின் உரிமையாளருக்கு விதித்த அபராத பட்டியலை மாமன்றத்தில் கேட்டறிந்து, உரிமையாளரை கண்டறியவில்லையென்றால் நிலத்தினை மாநகராட்சி உரிமையாக்கிக்கொள்ள் வேண்டும்.
பால்பண்ணை வாகன நெரிசலை சீர் செய்ய, அரியமங்கலம் இரயில்வே பாலத்தின் இறக்கத்தில் உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையிலிருந்து, மதுரை நெடுஞ்சாலை அணுகு சாலை வரை புதிய சாலை அமைக்க வேண்டும். என்றார். கூட்டத்தில் கவுன்சிலர்கள்,ராமதாஸ்,சுரேஷ் ,பிரபாகரன்,பைஸ் அகமது,அம்பிகாபதி,முத்துக்குமார் உள்ளிட்ட கவுன்சிலர்கள் தங்களது வார்டு பிரச்சனைகள் குறித்து பேசினார்..
இதற்கு மேயர் பதிலளித்து பேசும்போது,கவுன்சிலர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
கூட்டத்தில்,திருச்சி மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து தூய்மை பணியாளர்கள்,கொசு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் பொது சுகாதார பணியில் ஈடுபடும் வாகனங்களின் ஓட்டுநர்கள் என மொத்தம் 3243 நபர்களுக்கு முதல் கட்டமாக உணவு வழங்கும் பணியினை மேற்கொள்ள ரூபாய் 15.91 கோடிக்கு ஒப்புதல் வழங்குவது உள்பட 120 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

