Skip to content

125 நாள் வேலை- ஒன்றிய அரசின் நவயுக நாடகம்- எம்எல்ஏ சாடல்

125 நாள் வேலை என்பது
ஒன்றிய அரசின் நவயுக நாடகம். எம்.சின்னதுரை எம்எல்ஏ சாடல்.

புதுக்கோட்டை, பிப் 01- மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டத்தின் பெயரை மாற்றி 125 வேலை தருவோம் என்று ஒன்றிய ஆட்சியாளர்கள் சொல்வது நவயுக நாடகம் எனச் சாடினார் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் எம்.சின்னதுரை எம்எல்ஏ.,

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தை முழுமையாக அமுல்படுத்தக் கோரியும்,  விக்சித் பாரத்ஜீ ராம் ஜீ திட்டத்தை திரும்பப் பெறக்கோரியும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு சங்கத்தின் மாநிலத் தலைவரும், கந்தர்வகோட்டை தொகுதி  சட்டப் பேரவை உறுப்பினருமான எம்.சின்னதுரை பேசியதாவது:-

மகாத்மா காந்தி படுகொலையில் 9 பேர் குற்றம் சாட்டப்பட்டனர். அதில் இருவருக்கு மரண தண்டனையும், 6 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. சதித் திட்டம் தீட்டப்பட்டதற்கான ஆதரம் இல்லை என்று ஒருவர் விடுதலை செய்யப்படார். அந்த ஒருவர்தான் தற்பொழுது மதவெறிக் கூட்டத்தால் கொண்டாடப்படும் சாவர்க்கர். காந்தியைக் கொன்ற கோட்சேயின் அஸ்தியை இன்னமும் அவர்கள் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றியதன் மூலம் அவர்கள் மீண்டும் ஒருமுறை தேசத் தந்தையை படுகொலை செய்து இருக்கிறார்கள். ஒன்றிய அரசு திட்டத்திற்கு ஒதுக்கும் நிதியை 60 விழுக்காடாக குறைத்துவிட்டு 125 நாள் வேலை தருவேம் என்பது அவர்களின் நவயுக நடகம். சட்டத்தை திட்டமாக மாற்றியதன் மூலம் விருப்பத்தின் பேரில் நிதிகொடுக்கலாம் என்று ஆகிறது. இது எவ்வளவு பெரிய அநீதி. என்றார்.ஆர்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சி. பழனிவேல் தலைமை வகித்தார்.

error: Content is protected !!