புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சாகுபடிக்கு தேவையான உரங்கள் 1286 மெட்ரிக் டன்கள் தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரெயிலில் புதுக்கோட்டைக்கு வந்தடைந்தது எனமாவட்ட வேளாண் இணை இயக்குனர் மு. சங்கர லெட்சுமி கூறினார். மேலும் கூறுகையில்
மாவட்டத்தில் தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்கள், மக்காச்சோளம், நிலக்கடலை உளுந்து, கரும்பு மற்றும் தோட்டப் பயிர்களுக்கு தேவையான உரங்கள் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், தனியார் சில்லரை விற்பனை நிலையங்களில்
உரங்கள் கையிருப்பில் வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருவதாக கூறினார். உரங்களைஅதிகவிலைக்கு விற்கக்கூடாது எனவும் கூறினார். பல இடங்களில் நானே நேரில் சென்றுபஸ்கா ஆய்வு செய்து வருகின்றேன் என்றார். உடன் வேளாண் உதவி இயக்குனர் (பொ) முகமது ரபீக், ஸ்பிக் நிறுவன மாவட்ட பொறுப்பாளர் மயில்வாகன் சென்றனர்.

