சென்னையில் சாக்கடை அள்ளிய பள்ளி மாணவன்.. அதிர்ச்சி தகவல்…

117
Spread the love

சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் சாம். அப்பகுதியில் உள்ள பள்ளியில் இவர் 12ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிகள் இயங்காததால் ஆன் லைன் வகுப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க செல்பொன் அவசியம். இந்நிலையில் ஆன்லைனில் 12ம் வகுப்பு பாடங்களை படிக்க செல்போன் வாங்க சாம்மிடம் வசதி இல்லை. இதன் காரணமாக செல்போன் வாங்குவதற்காக கோயம்பேடு பகுதியில் சாக்கடை கழிவுக்குள் இறங்கி கழிவுகளை அகற்றும் வேலையில் ஈடுபட்டுள்ளார். இது குறித்த செய்தி வௌியானது கல்வியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.

LEAVE A REPLY