திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த நித்தியானந்தம் மகன் சீனிவாசன் (என்கிற) குரல்அரசன் (32) என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமிக்கு காதல் ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகி கர்ப்பமாக்கியுள்ளார். சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்றனர் அப்போது சிறுமி 5மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக சிறுமியின் தாயார் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் சீனிவாசன் என்கிற குரல்அரசன் என்பவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 13 வயது சிறுமி 5 மாத கர்ப்பம் ஆக்கிய காமக்கொடூரன் கைதான சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பு ஏற்படுத்தியது.