ழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அடுத்த குயிலாபாளையம் சாலையோர பகுதியில் நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர் இந்நிலையில் அப்பகுதியில் உள்ள 14 வயது சிறுமி ஒருவர் உடல்நிலை சரியில்லாததால் புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அப்பொழுது பரிசோதித்த டாக்டர் அவர் 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர் கோட்டகுப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்தபோது புதுச்சேரி கருவாடிகுப்பம் பழங்குடியினர் பகுதியைச் சேர்ந்த முத்தழகன் (23) என்பவரே காரணம் என்பது தெரியவந்தது. இவர் ஆரோவில் அருகே தனியார் ஓட்டலில் வேலை செய்து வருகிறார். சிறுமியிடம் பழக்கம் ஏற்பட்டு ஆசைவார்த்தைகள் கூறி உல்லாசத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது இதனை அடுத்து முத்தழகனை போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் 14 வயது சிறுமி 4 மாத கர்ப்பமாக இருந்த சம்பவம் ஆரோவில் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.