Skip to content

ஊழல் வழக்கு: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 14 ஆண்டுகள் சிறை

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் ஊழல் தடுப்பு நீதிமன்றம் இன்று [வெள்ளிக்கிழமை] வழங்கிய தீர்ப்பில் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. புஷ்ரா பீபிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து பாகிஸ்தான் அரசுக்கு வர வேண்டிய பணத்தை அல்-கதிர் என்ற பெயரில் அவர்கள் இணைந்து நிறுவிய அறக்கட்டளையில் வரவு வைத்து, அதற்கு பல நுாறு ஏக்கர் நிலத்தை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தானின் ஊழல் தடுப்பு தேசிய பொறுப்புடைமை பணியகம் (NAB) கடந்த 2023 ல் முன்வைத்தது வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் 3 முறை தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது வழக்கில் இருவரையும் குற்றவாளிகள் என நீதிபதி நசீர் ஜாவேத் ரண தீர்ப்பளித்தார்.

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட்டரும், 2018 முதல் 2022 வரை அந்நாட்டின் பிரதமராகவும் இருந்த இம்ரான் கான் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுக் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் விசாரணை நியாயமான முறையில் நடைபெறவில்லை என்று இம்ரான் கான் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

 

error: Content is protected !!