கோல்ட்ரிப் இருமல் மருந்தால் 19 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் அதன் உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோல்ட்ரிப் சிரப் மற்றும் வேறொரு மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட நெக்ஸ்ட்ரோ டிஎஸ் ஆகிய இரு வேறு இருமல் மருந்துகளை உட்கொண்ட 1 முதல் 7 வயதுடைய 19 குழந்தைகள் மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் அடுத்தடுத்த உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த வகையில், கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீசென் பார்மா நிறுவனத்தின் மருந்து தயாரிப்பு ஆலையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மருந்து தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் மாதிரிகள் (samples) கைப்பற்றப்பட்டன. அதில். உயிருக்கு தீங்கு விளைவிக்கும் அளவுக்கு அதில் 48.6% ‘டை எத்திலீன் கிளைக்கால்’ என்ற வேதிப்பொருள் கலக்கப்பட்டுள்ளது.
இதனால், ஸ்ரீசென் பார்மா நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அந்த நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் கோல்ட்ரிப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் இருமல் மருந்து குடிந்து குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், அம்மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கோல்டிரிப் மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.ரங்கநாதன் இன்று அதிகாலையில் சென்னையில் கைது செய்யப்பட்டார். சென்னை போலீசார் உதவியுடன் அசோக் நகர் வீட்டில் இருந்த ரங்கநாதனை மத்திய பிரதேச போலீசார் கைது செய்தனர்.