திருச்சி திருவரங்கம் மற்றும் பாலக்கரை பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், நேற்று (ஜனவரி 3) போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
திருவரங்கத்தில் சோதனை:திருவரங்கம் வீரேஸ்வரம் பகுதியில் உள்ள ஒரு மளிகைக் கடையில் போலீசார் ஆய்வு செய்தபோது, அங்கு மறைத்து வைத்து புகையிலை விற்கப்படுவது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக வீரேஸ்வரம் தெற்கு தெருவைச் சேர்ந்த கோபிநாத் (28) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 600 கிராம் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.
பாலக்கரையில் கைது:இதேபோல், பாலக்கரை ஆழம் தெரு அருகே புகையிலை விற்ற புதுக்கோட்டை மாவட்டம் பல்லவரம்பட்டி பகுதியைச் சேர்ந்த வினோத் (19) என்பவரை போலீசார் பிடிதனர். அவரிடமிருந்து 100 கிராம் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், பின்னர் அவர்களை ஜாமீனில் விடுவித்தனர். திருச்சியில் போதைப் பொருட்கள் விற்பனைக்கு எதிராகக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

