மாநிலம் திருச்சூர் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய இணை அமைச்சருமான சுரேஷ் கோபியை காணவில்லை என கேரள மாணவர் காங்கிரஸ் அமைப்பு திருச்சூர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. அவர் தொகுதிக்கு வருவதில்லை, மக்களால் அணுக முடியவில்லை என்று புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுரேஷ் கோபி 2024 தேர்தலில் பாஜக சார்பில் வெற்றி பெற்ற பின்னர் தொகுதியை புறக்கணித்துவிட்டதாகவும், மக்களின் பிரச்சினைகளை கவனிக்கவில்லை, உள்ளூர் வளர்ச்சி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் அவர் கவனம் செலுத்தவில்லை என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கேரள மாநிலம் வயநாடு மாவட்ட பா.ஜனதா பட்டியல் மோா்ச்சா தலைவர் முகுந்தன் பள்ளியரா வயநாடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு புகார் அளித்து உள்ளார். அதில் வயநாடு காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியை 3 மாதமாக காணவில்லை , அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என கூறி உள்ளனர்.