Skip to content

திருச்சியில் போதை மாத்திரை விற்ற ரவுடி உள்பட 2 பேர் கைது

திருச்சி கே.கே.நகர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட அண்ணா ஸ்டேடியம் அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கே.கே.நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் காமிலா பானு தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்பொழுது ஒரு வாலிபர் கையில் போதை மாத்திரையுடன் இருந்தத்தை கண்டுபிடித்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் இபி ரோடு சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் சக்திவேல் என்பவரின் மகன் சஞ்சய் என்கிற சச்சின் (25)என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போது சஞ்சய் போதை மாத்திரை விற்பனை செய்ய இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சச்சினை கைது செய்து அவரிடமிருந்து 500 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சச்சின் ரவுடி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று திருச்சி கோட்டை சரகத்துக்கு உட்பட்ட வடக்கு ஆண்டாள் வீதி பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த அன்னதான சத்திரத்தை சேர்ந்த அஜித் (26) என்ற வாலிபரை கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளார். கைது செய்யப்பட்ட அஜித்திடமிருந்து போதை மாத்திரை மற்றும் ஊசிகள், சலேன் பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

error: Content is protected !!