Skip to content

திருச்சியில் மூதாட்டி உட்பட 2 பேர் தீயில் கருகி பலி..

திருச்சியில் மூதாட்டி உட்பட 2 பேர் தீயில் கருகி சாவு..

திருச்சிகாந்தி மார்க்கெட் பகுதி விஸ்வாஸ் நகர் நான்காவது தெரு பகுதியை சேர்ந்தவர் பழனியாண்டி. இவரது மனைவி ராமாயி (வயது 25)இவர் தனது வீட்டில் சாமி கும்பிட விளக்கை ஏற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவரது சேலையில் தீ பிடித்தது. இந்த தீ விபத்தில் அவரது உடலில் தீக்காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
இதையடுத்து ஆபத்தான நிலையில் ராமாயி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பெற்று வந்த ராமாயி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

மற்றொரு சம்பவம் ..

இதே போல் திருச்சி உறையூர் தாத்தையங்கார் பேட்டை பசுமடம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 68) இவர் மனைவியை விட்டு தனியாக வசித்து வந்தார்.நடுநிலை அவர் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது கேஸ் அடுப்பில் இருந்து எரிவாயு கசிவு ஏற்பட்டு எதிர்பாராதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சுந்தரம் உடலில் பலத்த காயத்துடன் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுந்தரம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!