Skip to content

தொண்டையில் கேரட் சிக்கி.. 2 வயது பெண் குழந்தை சாவு

  • by Authour

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை தட்டாங்குளம் பகுதியை சேர்ந்த தம்பதி விக்னேஷ்-பிரமிளா. இவர்களுக்கு 2வயது குழந்தை லித்திஷா. பிரமிளா சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு குழந்தையுடன் சென்றுள்ளார். அப்போது வீட்டில் சமைக்காத கேரட் ஒன்றை சாப்பிட்டு விட்டு குழந்தை லித்திஷா விளையாடி கொண்டு இருந்துள்ளாள். இந்த நிலையில், திடீரென கேரட் குழந்தையின் தொண்டையில் சிக்கியதில் மூச்சுத்திணறி மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாய் மற்றும் உறவினர் குழந்தையை தூக்கிக்கொண்டு பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக் கேட்டு குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர் கதறி அழுதது காண்போரை கண்கலங்கச்செய்தது.

error: Content is protected !!