Skip to content

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது

திருச்சியில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கே.கே. நகர் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் காஜாமலை காலனி நீர்த்தேக்க தொட்டி அருகே சோதனை நடத்தியபோது, போதை மாத்திரை விற்ற தீபக் (28) என்பவரை கைது செய்து 13 மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனர்.

இதேபோல், கோட்டை போலீசார் ஓடத்துறை பாலம் அருகே நடத்திய சோதனையில், மேல சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (24) என்பவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து 10 போதை மாத்திரைகள் மற்றும் ஊசி பறிமுதல் செய்யப்பட்டன.

error: Content is protected !!