சென்னை அண்ணா அறிவாலயத்தில் பிப்.20 முதல் விநியோகம் செய்யப்பட்டுவந்த விருப்ப மனு இன்றுடன் நிறைவடைந்தது. திமுக சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிட ப 10,000க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோரும் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். திமுகவில் விருப்ப மனு அளிப்பதற்கான அவகாசம் மாலை 5 மணி உடன் நிறைவடைந்தது.

