Skip to content

சத்தீஷ்காரில் 22 நக்சலைட்டுகள் சரண்

சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம், தெலுங்கானா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது.
இந்த நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு தனிப்படை போலீசாருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேவேளை, அடுத்த மாதம் 31ம் தேதிக்குள் நாட்டில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது. இதையடுத்து, மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டோ, சரண் அடைந்தோ வருகின்றனர்.
இந்நிலையில், சத்திஷ்கார் மாநிலம் சுக்மா மாவட்டத்தை சேர்ந்த 22 நக்சலைட்டுகள் இன்று ஆயுதங்களை கைவிட்டு போலீசில் சரணடைந்தனர். சரணடைந்த நக்சலைட்டுகள் மறுவாழ்விற்காக தலா ரூ. 50 ஆயிரம் வழங்கப்பட்டும் என்றும் மேலும், மறுவாழ்விற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!