திருச்சி சரகத்தில் 22 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை திருச்சி சரக டிஐஜி வருண்குமார் பிறப்பித்துள்ளார். அதன்படி இடமாற்றம் செய்யப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர்கள் விவரம் வருமாறு:
திருச்சி கே.கே. நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்சவேணி கரூா் மாவட்டம் பாலவிடுதி போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் இன்ஸ்பெக்டர் சுமதி, அரியலூர் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டராகவும், புதுக்கோட்டை மாவட்டம் கே. புதுப்பட்டி இன்ஸ்பெக்டர் சீனிபாபு, ஜெயங்கொண்டத்துக்கும் மாற்றப்பட்டனர்.
ஜெயங்கொண்டம் ராஜேந்திரன், குளித்தலை இன்ஸ்பெக்டராகவும், லாலாப்பேட்டை இன்ஸ்பெக்டர் சரவணன், தொட்டியத்துக்கும், சமயபுரம் இன்ஸ்பெக்டர் வீரமணி, முசிறிக்கும், முசிறி மணிவண்ணன், துவாக்குடிக்கும்,
கந்தர்வக்கோட்டை கலைவாணி புதுக்கோட்டை சைபர் கிரைமுக்கும், புதுக்கோட்டை சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கார்த்திக் பிரியா, ஆலங்குடி மதுவிலக்கு பிரிவுக்கும் மாற்றப்பட்டனர்.
மீமிசல் இன்ஸ்பெக்டர், கதிரவன், துறையூர் மதுவிலக்கு பிரிவுக்கும், திருக்கோகர்ணம் மாலதி, மீமிசலுக்கும், தா.பழுர் சியாமளா தேவி இலுப்பூருக்கும், இலுப்பூர் கலா கே. புதுப்பட்டிக்கும் மாற்றப்பட்டனர்.
மணப்பாறை ரகுராமன் சமயபுரத்துக்கும், அரியலூர் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் உதயகுமார், மணப்பாறைக்கும், பெரம்பலூர் தனிப்பிரிவு வெங்கடேஸ்வரன், மீன்சுருட்டிக்கும் மாற்றப்பட்டனர்.
பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிக்கந்தர்பாஷா, கூவாகத்துக்கும்,. அரியலூா் தனிப்பிரிவு செல்வகுமாரி, பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டனர்.
பாலவிடுதி ரூபி, திருச்சி சரக காத்திருப்போர் பட்டியலுக்கும், கூவாகம் யசோதா, சரக காத்திருப்போர் பட்டியலுக்கும், குளித்தலை விஜயகுமார், திருக்கோகர்ணத்துக்கும் மாற்றப்பட்டனர்.
