ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு 2024-25 ஆம் கல்வியாண்டில், கரூர் மாவட்ட அளவில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 100% பாட வாரியாக தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்கள் மாவட்ட மற்றும் பள்ளி அளவில் சிறப்பு நிலைத் தகுதி பெற்ற மாணவர்கள், ஒரு கல்வி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா கரூர் அருகே உள்ள அட்ரஸ் கலையரங்கத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தலைமையில் நடைபெற உள்ளது.
இதில் சாதனை படைத்த ஆசிரியர் பெருமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் என 2500 பேருக்கு பாராட்டி நினைவு பரிசுகளை முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி வழங்க உள்ளார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செல்வமணி, மாவட்ட கல்வி அலுவலர் திருநாவுக்கரசர் (இடைநிலை ஆசிரியர்) முன்னிலையிலும் நடைபெறும் நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் சண்முகம் நன்றி உரை ஆற்ற உள்ளார்.
அரசு பள்ளி தமிழ்நாட்டில் தனியார் பள்ளிக்கு இணையாக செயல்பட்டு வரும் நிலையில் அதில் மாணவர்களை ஊக்குவித்து பல்வேறு முன்னெடுப்புகளை கொண்டு வந்துள்ள ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர்.