Skip to content

6 பவுன் போலி நகையை அடகு வைத்து 3.34 லட்சம் மோசடி… 2 பேர் கைது

காரைக்கால் விழுதியூர் பகுதியைச் சேர்ந்த ராஜு மகன் சிவா (26), காரைக்கால் திருநள்ளாறு சேத்தூர் பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் ஸ்ரீராம் ( 21 ) ஆகிய இருவரும் கடந்த 9 .12 . 2025 அன்று திருவையாறு, ஓடத்துறை தெரு உமேத் மல்சோப்ரா மகன் வினோத்குமார் சோப்ரா (48 ) என்பவரது அடகு கடைக்கு மதியம் 1.30க்குசென்றனர்.
கடையில் 3 பவுன் போலி நகையை கொடுத்து ஏமாற்றி ரூபாய் 1, 84,000 பெற்றுக் கொண்டு சென்று விட்டனர். பின்னர் அன்று மதியம் 2.30 மணிக்கு கண்டியூர் கடை தெருவில் அடகு வைத்திருக்கும் தஞ்சை மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த சம்பூஜீபார்தி மகன் கனகபத்பார்த்தி (28 )என்பவரது அடகு கடையில் 3 பவுன் போலி நகையை அடகு வைத்து ஏமாற்றி ரூ 1, 50,000 பணம் பெற்றுக் கொண்டு சென்றனர். இதையடுத்து நகை கடைகாரர்கள் வங்கிக்கு சென்று நகையை சோதனை செய்த போது போலி நகை என்பது தெரியவந்தது. இதையடுத்து வினோத்குமார் சோப்ரா, கனகபத்பார்தி ஆகியோர் திருவையாறு போலீசில் புகார் செய்தனர் புகாரின் பேரில் போலீஸ் டிஎஸ்பி அருள்மொழிஅரசு தலைமையில் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், எஸ்ஐ உதயச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமரா அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு போலி நகை அடகு வைத்து ஏமாற்றிய சிவா , ஸ்ரீராம் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு திருவையாறு கோர்டில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!