Skip to content

திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற 3 பேர் கைது

திருச்சி மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் விற்பனையைக் கட்டுப்படுத்த போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மாநகரின் மூன்று வெவ்வேறு இடங்களில் புகையிலை விற்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

செசன்ஸ் கோர்ட் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சோதனை நடத்தியபோது, காட்டூர் பகுதியைச் சேர்ந்த விஜயராகவன் (25) என்பவர் புகையிலை விற்றது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அதேபோல், எடமலைப்பட்டி புதூர் காளியம்மன் கோவில் தெருவில் புகையிலை விற்ற ஷேக் பாரூக் (29) என்பவரை போலீசார் பிடித்துள்ளனர்.

மேலும், திருச்சி அரசு மருத்துவமனை அருகே ஈ.வி.ஆர் சாலையில் உள்ள ஒரு மளிகைக் கடையில் ரகசியமாக புகையிலை விற்ற சண்முகம் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர். பிடிபட்ட மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், பின்னர் அவர்களை ஜாமீனில் விடுவித்தனர். தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

error: Content is protected !!